ஆபாசமான AI புகைப்படத்தில் மனா உளைச்சனில் நடிகை பிரியங்கா மோகன்!
Actress priyanka mohan AI Image
நடிகை பிரியங்கா மோகனின் பெயரை தவறாக பயன்படுத்தி, ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட ஆபாசமான போலி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த புகைப்படங்கள் முற்றிலும் போலியானவை என்றும், அவற்றை யாரும் பகிரக்கூடாது என்றும் நடிகை பிரியங்கா மோகன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுத் கேட்டுக்கொண்டுள்ளார்.
தெலுங்கு திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா அருள் மோகன், தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது கவினுடன் இணைந்து அவரது 9வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, அவரை ஆபாசமாக சித்திரித்த சில படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பதிவில், “சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை. தயவுசெய்து அவற்றை பகிரவோ, பரப்பவோ வேண்டாம். ஏஐ ஒரு பொறுப்பான படைப்பாற்றலுக்காக பயன்படுத்தப்பட வேண்டும், தவறான நோக்கங்களுக்காக அல்ல. நாம் உருவாக்குவதிலும் பகிர்வதிலும் நெறிமுறை கடைபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பெண்கள் மீது ஏஐ தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை தேவை என வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
Actress priyanka mohan AI Image