2 குழந்தைகளை கொன்று விட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு..காரணம் என்ன?
After killing 2 children a young woman made a shocking decision What is the reason?
2 குழந்தைகளை கொன்று விட்டு இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் விஜயலெட்சுமி என்பவருக்கு திருமணமாகி பிரிண்டா என்ற மகளும், புவன் என்ற மகனும் இருந்துள்ளனர்.விஜயலெட்சுமி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.கணவர் பெங்களூருவில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், விஜயலெட்சுமி நேற்று முன் தினம் சம்பவத்தன்று மாலை தனது 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயலெட்சுமி இந்த விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.2 குழந்தைகளை கொன்று விட்டு இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்ராய்ச்சூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
After killing 2 children a young woman made a shocking decision What is the reason?