தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்! அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
chennai imd rain alert
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, இன்று நீலகிரி, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வட ஆந்திரா அருகிலுள்ள பிரதேசங்களின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடையிடையே கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.