வரும் 17 ஆம் தேதி கரூர் செல்லும் விஜய்..!
Karur Stampede TVK Vijay
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தின் போது கடந்த 27-ந் தேதி ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. குழுவினர், கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான விசாரணைகளை தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் வரும் 17-ந்தேதி வர முடிவு செய்துள்ளார். அத்துடன், வேலுசாமிபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அந்த குடும்பங்களை சந்தித்து நிவாரண உதவியை நேரில் வழங்குவார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, மண்டபம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் த.வெ.க.வினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு சமர்ப்பிக்க உள்ளனர். காவல்துறை அனுமதி பிறகு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது.