பீகார் தேர்தல்: 100 இடங்களில் களம் இறங்க ஓவைசி கட்சி திட்டம்..!
Owaisis party plans to contest 100 seats in Bihar elections
243 உறுப்பினர்களைக் கொண்ட பீஹார் சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் 06 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி முடிவு செய்துள்ளது. இது கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகம். இது தொடர்பாக, ஒவைசி கட்சியின் பீஹார் மாநில தலைவர் அக்தருல் இமான் கூறியுள்ளதாவது:

100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது திட்டம். இரண்டு கூட்டணிகளும் தங்களது இருப்பை உணர வேண்டிய நிலையில் உள்ளன. 2020-ஆம் ஆண்டு தேர்தலின்போது, நாங்கள் ஓட்டுகளை பிரித்ததாக மகா கூட்டணி குற்றம் சாட்டியது. அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க விருப்பம் இருப்பதாக நான் லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கிருந்து பதில் வரவில்லை.
தற்போது நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. 03-வது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருகிறோம். இன்னும் சில நாட்களில் அது தெளிவாகிவிடும். பீஹாரில் மூன்றாவது மாற்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
பல ஆண்டுகளாக, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியை மையமாகக் கொண்டு அரசியல் நடந்து வருகிறது.' என்று கூறியுள்ளார்.
English Summary
Owaisis party plans to contest 100 seats in Bihar elections