மிசிசிப்பியில் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கி சூடு; 04 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..!
04 people killed in shooting at football stadium in America
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் கால்பந்து மைதானம் ஒன்றுக்குள் திடீரென மர்ம நபர் புகுந்து, நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியாகியுள்ளதோடு, 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாகவுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் நான்கு பேர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட்டுள்ளனர். ஆனால், இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர்.

இதனையடுத்து, மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமை அதிர்ச்சியளிக்கிறது. இதேபோல கடந்த மாதம் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் கொல்லப்பட்டனர்.
அதை தொடர்ந்து, வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 02 பேர் உயிரிழந்துள்ளதோடு, கடந்த அக்டோபர் 09-ஆம் தேதி ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 04 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
04 people killed in shooting at football stadium in America