காங், 28, விசிக-விற்கு 8... அந்த பக்கம் பாஜக 20+, அமமுக 8 இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை! - Seithipunal
Seithipunal


தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணியில் அதிருப்திக் குரல்கள் எழுவதைத் தவிர்க்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் தங்களது தோழமைக் கட்சிகளுடன் 'திரைமறைவு' பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

திமுக-வின் கணக்கு: யாருக்கு எத்தனை?
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே திமுக தரப்பில் டி.ஆர்.பாலு, எ.வ.வேலு போன்றோர் களம் இறங்கியுள்ளனர்:

மநீம: 3 இடங்கள். முஸ்லிம் லீக், மமக, கொமதேக: தலா 2 இடங்கள். சிறிய கட்சிகள்: வேல்முருகன், கருணாஸ் போன்றோருக்குத் தலா 1 தொகுதி.

இடதுசாரிகள் & மதிமுக: கடந்த முறையைப் போலவே தலா 6 இடங்கள். மதிமுக தனிச் சின்னத்தில் நின்றால் இந்த எண்ணிக்கை குறையலாம்.

விசிக இரட்டை இலக்கத்தை எதிர்பார்க்க, திமுக 2 இடங்கள் மட்டுமே கூடுதலாகத் தர முன்வருகிறது. தேமுதிக வந்தால் 7 சீட் + ஒரு ராஜ்யசபா சீட் என்ற 'ஆஃபர்' தயாராக உள்ளது.

காங்கிரஸ்: இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை; அதிகபட்சமாக 28-30 இடங்கள் வரை பேசப்படலாம்.

அதிமுக-வும் தனது பங்கிற்குப் பேச்சுவார்த்தையைத் துரிதப்படுத்தியுள்ளது: பாஜக: 20 முதல் 25 இடங்கள். அமமுக: 8 இடங்கள். இதர கட்சிகள் (தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி): தலா 1 முதல் 3 இடங்கள். சில கட்சிகளுக்கு பாஜக தனது கோட்டாவிலிருந்தே சீட்களை ஒதுக்கவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk and admk seat share allince election 2026


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->