இது தான் நீங்கள் பேசும் பெண் உரிமையா? பாஜக வானதி, குஷ்புவிற்கு காங்கிரஸ் எம்பி கேள்வி! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்பி சுதா விடுத்துள்ள கண்டன செய்தியில், " கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களைவை எதிர் கட்சியின் தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களை பேச அனுமதிக்காத ஒன்றி பிஜேபி மோடி அரசின் சனநாயக விரோத போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினோம், 

இதற்கு கண்டனம் தெரிவிப்பதாக நினைத்து கொண்டு கரூர் பிஜேபி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் என்பவர் பொது வெளியில் மேடையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா செல்வி.ஜோதிமணி அவர்களை ஒருமையில் தனிமனித மாண்பை குறைக்கும் வகையில் பேசியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன், பெண்களை இதுபோன்று கீழ் தரமாக பேசுவது மூலம்  பொது வாழ்வில் இருந்து அப்புறவுபடுத்தலாம் அல்லது அச்சிபடுவதலாம் என்ற அரசியலை பிஜேபி யின் மாநில தலைவர் முதல் மாவட்ட தலைவர்கள் வரை நினைப்பது மிகவும் பிற்போக்கு தனமானது, RSS BJP தனது கட்சியின் அரசியல் பயலறிங்கில்  இப்படிதான் சொல்லி கொடுக்கிறதா? 

Bjp நிர்வாகிகள் தொடர்ச்சியாக பெண்களை கேவலமாகவும் இழிவாகவும் பேசிவருதை திருமதி குஷ்பு அவர்களும் திருமதி வானதி அவர்களும் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? இது தான் நீங்கள் பேசும் பெண் உரிமையா? 

செல்வி.ஜோதிமணி அவர்களை இழிவாக விமர்சனம் செய்த பிஜேபி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மீது கடும் பிரிவுகள் அடிப்படையில் வழக்கை பலப்படுத்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும், பொதுவாழ்வில் இருக்கும் பெண்களை இழிவாக பேசும் பிற்போக்கு வாதிகளுக்கு இந்த வழக்கும் கைதும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress mp sudha condemn to bjp


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->