முக அழகிரி பேச்சு அரைவேக்காட்டுத் தனமானது - திமுக எம்பி டிஆர் பாலு ஆவேசம்!
dmk mp tr balu MK Azhagiri BJP Annamalai
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 'டிஎம்கே ஃபைல்ஸ்' அவதூறு வழக்கில் திமுக எம்பி டி.ஆர். பாலுவிடம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய குறுக்கு விசாரணை, அரசியல் களத்தில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்ற 'டிஎம்கே ஃபைல்ஸ்' தொடர்பான குறுக்கு விசாரணையில், பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பிய கேள்விகளுக்கு திமுக எம்பி டி.ஆர். பாலு பதிலளித்தார். அதன் விவரம்:
அழகிரி கிளப்பிய விவகாரம்: மத்திய அமைச்சராக இருந்தபோது டி.ஆர். பாலு 10 கப்பல்களை வாங்கியதாக மு.க. அழகிரி அளித்த பேட்டியை அண்ணாமலை ஆதாரமாகக் காட்டினார்.
அதற்க்கு, "நான் 10 கப்பல்கள் வாங்கவில்லை, வெறும் 2 மீன்பிடி கப்பல்கள் மட்டுமே வாங்கினேன்" என டி.ஆர். பாலு பதிலளித்தார்.
அரைவேக்காட்டுப் பேச்சு: அழகிரியின் இந்தப் பேட்டியை "அரைவேக்காட்டுத் தனமானது" என டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் விமர்சித்தார். மேலும், அண்ணாமலையும் அழகிரியும் சேதுசமுத்திரத் திட்டம் குறித்துத் தெரியாமலேயே பேசுகின்றனர் எனச் சாடினார்.
வழக்கு ஏன் இல்லை?: "தவறான தகவல் என்றால் அழகிரி மீது ஏன் அவதூறு வழக்கு தொடரவில்லை?" என்ற அண்ணாமலையின் கேள்விக்கு, "அழகிரி உள்நோக்கத்துடன் பேசினார் எனக் கருதவில்லை" என டி.ஆர். பாலு விளக்கமளித்தார்.
சொந்தக் கட்சித் தலைவரின் அண்ணனான மு.க. அழகிரியின் பேச்சையே நீதிமன்றத்தில் "அரைவேக்காடு" என டி.ஆர். பாலு விமர்சித்தது, திமுக - அழகிரி உறவில் இன்றும் நீடிக்கும் கசப்பையே வெளிப்படுத்துகிறது.
மறுபுறம், ஒரு வழக்கறிஞராக அண்ணாமலையே நேரிடையாகக் குறுக்கு விசாரணை செய்தது, பாஜகவின் 'டிஎம்கே ஃபைல்ஸ்' மீதான உறுதியைக் காட்டுகிறது.
English Summary
dmk mp tr balu MK Azhagiri BJP Annamalai