உதவியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு..நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள
உதவியாளர் (Clerk) காலி பணியிடங்களுக்கான தேர்வு மையத்தினை நேரில்
சென்று பார்வையிட்டார்.

ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி மற்றும் வேளாளர்
மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று (11.10.2025) நடைபெற்ற
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள
உதவியாளர் (Clerk) காலி பணியிடங்களுக்கான தேர்வு மையத்தினை மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று
பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் ஈரோடு
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள
உதவியாளர் (Clerk) காலி பணியிடங்களுக்கு இன்று திண்டல், வேளாளர்
மகளிர் கல்லூரி மற்றும் வேளாளர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில்
நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள இவ்விரு மையங்களில் 1901 நபர்கள் தேர்வு
எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் 1497 நபர்கள் வருகைபுரிந்து
இத்தேர்வினை எழுதுகின்றனர். 404 நபர்கள் தேர்வு எழுத வருகை
புரியவில்லை. இத்தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இத்தேர்வு
எழுத வருகை புரிந்தவர்களுக்கு தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம்,
குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்திரு.ப.கந்தராஜா, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல்பதிவாளர் திரு.குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Selection for assistant vacant positions District Collector Kandhasami inspected on time


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->