சட்டசபை தேர்தல் : இன்று சென்னை வரும் இந்திய தேர்தல் அதிகாரிகள்…! - ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை!
Assembly Elections Indian election officials arrive Chennai today Intensive discussions preparations
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதைக் கண்காணிக்க துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று தமிழகம் வருகை தருகிறது. தேர்தல் இயந்திரம் முழு வேகத்தில் செயல்படுவதை உறுதி செய்வதற்கான இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

11ஆம் தேதி இரவு சென்னை வரும் இந்த குழுவினர், 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தலைநகரில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
12ஆம் தேதி, முதலில் தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி, பின்னர் சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே,வருமான வரித்துறை, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமானப் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தேர்தல் காலத்தில் சட்டம்-ஒழுங்கு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விரிவான திட்டங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளன.
13ஆம் தேதி, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) உடன் துணை கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து மாவட்ட காவல் சூப்பிரண்டுகளுடனும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் நடைபெறும். குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் உருவாகக்கூடிய தொகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகள் குறித்து விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்படும்.இந்த இரண்டு நாள் ஆலோசனை, தமிழக தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
English Summary
Assembly Elections Indian election officials arrive Chennai today Intensive discussions preparations