ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போயஸ் கார்டனில் உச்சக்கட்ட பதற்றம்..!
Bomb threat to Rajinikanth house
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு மர்ம நபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் ரஜினியின் வீட்டில் சோதனை நடத்தியத்தில், அது புரளி என தெரிய வந்துள்ளது. இருப்பினும், மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மை காலமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bomb threat to Rajinikanth house