ஓய்வுபெற்ற நீதிபதியிடம் கைவரிசை: ரூ.31 லட்சம் டிஜிட்டல் மோசடி: மர்ம நபருக்கு வலைவீச்சு..!
Retired judge faces Rs 31 lakh digital fraud
மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த மாதம் 25-ந்தேதி அடையாளம் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
எதிர்முனையில் பேசியவர் நீதிபதியின் செல்போன் எண்ணில் இருந்து 40 பேருக்கு ஆபாச செய்திகள் அனுப்பட்டுள்ளதாகவும், மேலும் உங்கள் வங்கிக்கணக்கு மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதன் பின்னர் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்ட நபர், தங்களது வங்கி கணக்கு மூலம் ரூ.30 லட்சம் மோசடி நடந்துள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவுபடி உங்களுக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது என்று கூறியதால், இதைக்கேட்டு முன்னாள் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து குறித்த மோசடி நபர், நீதிபதியிடம் 02 தனித்தனி வங்கிக் கணக்குகளில் ரூ.31 லட்சத்தை டெபாசிட் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் விசாரணையின் போது அவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அந்த தொகையை திரும்பி தருவதாக உறுதியளித்துள்ளார். இதை நம்பிய நீதிபதியும் நபர் தெரிவித்த வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.
02 வாரங்களுக்கு பிறகுதான் முன்னாள் நீதிபதிக்கு, தான் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி பணத்தை இழந்தது தெரிய வந்துள்ளது. இதனால், அவர் ஆன்லைன் மூலமாக போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் நீதிபதியிடம் பணமோசடியில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.
English Summary
Retired judge faces Rs 31 lakh digital fraud