கொல்கத்தா மருத்துவ மாணவி பலாத்காரம்: இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது: திரிணாமூல் காங்கிரஸ்..!
Trinamool Congress says that politics should not be played on the issue of sexual harassment of a student in Kolkata
மேற்கு வங்காள மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த மாணவி 02-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி மருத்துவமனை வளாகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவி இரவில் வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

தற்போது அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கடந்த ஆண்டு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் கொல்கத்தாவில் ஒரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.
English Summary
Trinamool Congress says that politics should not be played on the issue of sexual harassment of a student in Kolkata