'2027 உலக கோப்பையில் விளையாட விரும்புகிறேன்'; மனம் திறந்த ஜடேஜா..! - Seithipunal
Seithipunal


அக்டோபர் 19-ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 05 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை.

இதனையடுத்து, தேர்வுக்குழுவின் முடிவை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், சடகோபன் ரமேஷ் மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் போன்றவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களும் கொந்தளித்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் ஜடேஜா, 2027 உலகக்கோப்பையில் விளையாட விரும்புகிறேன் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, 'ஒருநாள் போட்டிகளில் நான் விளையாட விரும்புகிறேன், ஆனால், அது என் கையில் இல்லை. முடிவில் அணி நிர்வாகம், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கிறார்கள். அணி கட்டமைப்பு குறித்து அவர்கள் என்னிடம் பேசினார்கள், அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதற்கான காரணத்தை அவர்கள் தெரிவித்தது நல்ல விஷயம். அதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இத்தனை வருடங்களாக நான் இந்திய அணிக்கு செய்ததை மீண்டும் செய்ய முயற்சிப்பேன். 2027 உலகக் கோப்பையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அதற்கு முன்பு பல ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்து நான் சிறப்பாகச் செயல்பட்டால், அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. உலகக் கோப்பையை வெல்வது என்பது அனைவரின் கனவு. கடந்த முறை நாங்கள் அதை மிக அருகில் சென்று தவறவிட்டோம், அடுத்த முறை அதைச் சரி செய்வோம்' என்று ஜடேஜா மனம் திறந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jadeja opens up about wanting to play in the 2027 World Cup


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->