காசாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்கள்: காரணம் என்ன..?
American soldiers camped in Gaza
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் சுமார் இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வந்தது. குறித்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் முயற்சி செய்தார்.
இதன் பலனாக இருதரப்பினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 09-ஆம் தேதி இரு தரப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு கடந்த 10-ஆம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த அமைதி ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 72 மணி நேரத்தில் விடுக்கப்பட வேண்டும். இந்த சூழலில் அமெரிக்கா, எகிப்து, கத்தார், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள், வீரர்கள் காசாவில் முகாமிட்டு போர் நிறுத்தத்தை கண்காணிக்க உள்ளனர்.
அதற்காக அமெரிக்காவின் சார்பில் 200 வீரர்கள் காசாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். அமெரிக்க ராணுவத்தின் முதல் குழு நேற்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த குழு அங்கிருந்து காசா எல்லைப் பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த வார இறுதிக்குள் 200 அமெரிக்க வீரர்கள் இஸ்ரேலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அவர்கள் காசாவில் முகாமிட்டு போர் நிறுத்தத்தை முழுமையாக கண்காணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
American soldiers camped in Gaza