ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நயினார் நாகேந்திரன்...!
Nayinar Nagendran met Rajinikanth person and congratulated him
பிரபல இயக்குனர் மறைந்த கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் சூப்பர்ஸ்டார் 'ரஜினிகாந்த்' திரையுலகில் அறிமுகமாக்கப்பட்டார். கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி, இந்த 'அபூர்வ ராகங்கள்' படம் திரையில் வெளியானது.

அவ்வகையில் நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதுவரை இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் 171 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும், திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, 2 பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான ''தாதா சாகேப் பால்கே விருது'' உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
இந்நிலையில், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்துக்கு பலமொழி நடிகர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே, இன்று பா.ஜ.க. மாநில தலைவர் ''நயினார் நாகேந்திரன்''நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது, திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.சந்திப்ப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இதில் பல விமர்சனங்களையும் கண்டு வருகிறது.
English Summary
Nayinar Nagendran met Rajinikanth person and congratulated him