மற்ற திரைப்படத்துறைக்கும், தமிழ் திரைப்படத்துறைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு...! - மனம் திறந்த ஏ.ஆர். முருகதாஸ் - Seithipunal
Seithipunal


அண்மைக்காலமாக தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ''மதராஸி'' படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் வருகிற 5 ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது.

இதனிடையே படத்திற்கான புரமோஷனின்போது ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி கிளப்பில் நுழையத் தவறியதற்கு விளக்கம் கொடுத்தார்.அவ்வகையில்,"மற்ற மொழி படங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் செய்கின்றன என்றும், அந்த திரைப்படத்துறை இயக்குனர்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமே படம் செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ஆனால், தமிழ் திரையுலக இயக்குனர்கள் படத்தின் மூலம் மக்களுக்கு கல்வி கற்பிக்கிறார்கள் என்றும் படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும்,"இதன் காரணமாகத் தான் மற்ற திரைப்படத் துறைகளுக்கும், தமிழ் திரைப்படத் துறைக்கும், பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது" என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

கூடுதலாக,"பிற மொழி படங்கள் ரூ.1,000 கோடி கிளப்பில் ஏற்கனவே நுழைந்திருக்கும்நிலையில், தமிழ் படங்கள் இன்னும் அதை செய்யவில்லை" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

big difference between other film industries and Tamil film industry Ar Murugadoss opens up


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->