டிரம்மில் கணவனின் உடலை அடைத்து உப்பு கொட்டிவிட்டு மாயமான மனைவி மற்றும் குழந்தைகள்...!
Wife and children disappear after husbands body stuffed drum and salt poured over
ராஜஸ்தானில் கைர்தல் மற்றும் திஜாரா மாவட்டத்தை சேர்ந்த ஹான்ஸ்ராமுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றன.செங்கல் சூளையில் வேலை பார்த்துவரும் இவர் வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.இதனிடையே,ஹான்ஸ்ராமின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் காவலில் தெரிவித்தனர்.

அந்த புகாரின்பெயரில், சம்பவ இடத்துக்கு சென்ற காவலர்கள்,வீட்டை திறந்து சோதனையிட்டனர். அப்போது வீட்டின் மேல்பகுதியிலிருந்த டிரம் ஒன்றுக்குள் ஹான்ஸ்ராம் அவரது உடல் சிதைந்த நிலையில் இருந்தது. இதைக் கண்டு காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதில் ஹான்ஸ்ராமின் கழுத்து பகுதி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் அவரது உடல் இருந்தது.
மேலும், அந்த டிரம்மில் உடல் சிதைவதை தடுப்பதற்காக உப்பு போடப்பட்டு இருந்தது. அங்கிருந்து ஹான்ஸ்ராமின் உடலை மீட்ட காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஹான்ஸ்ராமின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் காணாமல் போன நிலையில், வீட்டு உரிமையாளரின் மகனும் மாயமாகியுள்ளது காவலர்களுக்கு அவர்களின் மேல் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மாயமானவர்களை கண்டுபிடித்தாலே இந்த சம்பவத்துக்கான காரணம் முழுவதுமாக தெரிய வரும் என்ற நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.டிரம்மில் அடைக்கப்பட்ட உடல் மீது உப்பு கொட்டியருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Wife and children disappear after husbands body stuffed drum and salt poured over