தேர்தல் ஆணையத்தை விடாத திமுக.! கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் ஸ்டாலின்! 7 கேள்விகள் என்னென்ன?
DMK not letting go of the Election Commission Stalin keeps asking questions after questions What are the 7 questions
2024 மக்களவை தேர்தல் மற்றும் அதன் பிந்தைய மகாராஷ்டிரா, கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூர் மத்திய தொகுதியில் மட்டும் 1 லட்சம் போலி வாக்குகள் இருப்பதாகவும், பல இடங்களில் ஒரே முகவரியில் பல வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கான ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டார்.
இந்த குற்றச்சாட்டுக்குப் பின்னர், பீகார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதை எதிர்க்கட்சிகள், “பாஜகவுக்கே சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” என விமர்சித்தனர்.
ஆனால், தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. “வாக்காளர் பட்டியல் திருத்தம் வெளிப்படையாகவும், கடுமையான நெறிமுறைகளை பின்பற்றியும் நடைபெற்றுள்ளது. எந்த முறைகேடும் இல்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தேர்தல் ஆணையத்தை நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் முன்வைத்த 7 கேள்விகள் பின்வருமாறு:
-
வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
-
புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. தகுதி பெற்ற இளம் வாக்காளர்கள் முழுமையாக சேர்க்கப்பட்டனரா? 18 வயது நிறைவுற்றவர்களின் சரியான தரவுகள் உள்ளனவா?
-
Registration of Electors Rules, 1960 இன் கீழ் உள்ள முறையீடு காலவரையறை காரணமாக, பீகார் தேர்தலில் பல வாக்காளர்கள் விலக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதை எப்படி தீர்ப்பது?
-
பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடைபெறும் போது, இத்தகைய சிக்கல்களை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளுமா?
-
மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 01/05/2025 அன்று அறிவித்து, 17/07/2025 அன்று மீண்டும் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
-
வாக்காளர் அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்க தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது என்ன காரணம்?
-
“நியாயமான தேர்தல்கள்” என்பதே இலக்கு எனில், தேர்தல் ஆணையம் மேலும் வெளிப்படையாகவும், வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்க வேண்டியதில்லைா?
English Summary
DMK not letting go of the Election Commission Stalin keeps asking questions after questions What are the 7 questions