ஜெலென்ஸ்கியிடம் டிரம்ப் பேச்சுவார்த்தை...வெளியான பரபரப்பு தகவல்!
Trumps talks with Zelensky a sensational information revealed
பாதுகாப்பை உறுதி செய்யாமல் உக்ரைனில் தேர்தல் நடத்த முடியாது, யாருடைய தலையீடும் இல்லாமல் தேர்தல் நடைபெற வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ரஷியா-உக்ரைன் இடையே நடந்து வரும்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். அதற்காக ரஷிய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி சந்தித்து பேசினார்.
அமெரிக்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து முடிவும் எட்டப்படவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். அப்போது ஜெலன்ஸ்கி உடன் சேர்ந்து, டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர், பிரான்ஸ் அதிபர், ஜெர்மனி அதிபர் உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். ஜெலன்ஸ்கியை வரவேற்று அழைத்து சென்றார் டிரம்ப்.
அதனை தொடர்ந்து டிரம்ப் பேசியதாவது:- . போரை முடிவுக்கு கொண்டு வர புதினும் விரும்புகிறார்.. இது வரை 6 பேர்களை நிறுத்தியுள்ளேன். விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். . இது தொடர்பாக ரஷ்யா- உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும்.
இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது.
புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன். பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம் . உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என்றார்.
. இதனையடுத்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவி தேவை, பாதுகாப்பை உறுதி செய்யாமல் உக்ரைனில் தேர்தல் நடத்த முடியாது, யாருடைய தலையீடும் இல்லாமல் தேர்தல் நடைபெற வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து 7 ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் டிரம்ப் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
English Summary
Trumps talks with Zelensky a sensational information revealed