மேடையில்தான் வீர வசனம் எல்லாம்! முதல்வர் வீட்டுக்கு சென்று பம்முனது யாரு? சீமானை கிழித்து எடுத்த விஜயலட்சுமி! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற செஞ்சிக் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீமான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, செய்திகளைச் சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுக்க முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டது. மேடையிலிருந்து இதைக் கண்ட சீமான், ஆவேசமாக மேடையிலிருந்து கீழே இறங்கி, நேரடியாக சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றார். ஆனால் கட்சியின் நிர்வாகிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய சீமான், “சலசலத்திற்கும் சட்டத்திற்கும் அஞ்சுகின்ற திராவிட நரிகள் நாங்கள் அல்ல” என்று வலியுறுத்தி, தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.

இதேவேளையில், நடிகை விஜயலட்சுமி சீமான் பேச்சை குறிவைத்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
“சீமான் மேடையிலிருந்து இறங்கி ஒருவரை அடித்து, பின்னர் வீர வசனங்கள் பேசியுள்ளார். ஆனால் உண்மையில் அவர் சொல்வது மற்றும் செய்வது ஒன்று போல இல்லை. வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்கு தனியாக சென்று எதிர்கொள்ளாமல், ஆடியோ மெசேஜ் மூலம் ஆதரவாளர்களை கூட்டிச் சென்றார். காவல்துறையின் விசாரணையை வீரமாய் எதிர்கொண்டிருக்க வேண்டியவர், ஏன் சுப்ரீம் கோர்ட்டில் தடை பெறச் சென்றார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை உறவாகக் கூறிக் கொண்டாலும், அவர்கள் யாரும் உங்களை அண்ணன், தம்பி என்று ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் சொல்கிற இந்த வீர வசனம் என்ன பொருள் என யாராவது சொல்லித் தருவீர்களா?” என்று விஜயலட்சுமி விமர்சித்துள்ளார்.இந்தச் சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை தூண்டியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

All the heroic dialogues are on stage Who went to the Chief Minister house and said Who is the one wh


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->