ரஷ்யா செல்லும் ஜெய்சங்கர்... 3 நாள் பயணத்தின் காரணம் என்ன?
Jaishankar Russia What reason 3 day trip
இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா 50 % வரி இந்திய பொருட்களுக்கு விதித்துள்ளது. இதன் காரணமாக இரு நாட்டு நட்பு உறவில் தற்போது விரிசல் விழுந்துள்ளது.

இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ரஷ்யா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உரையாடினார். இதைத் தொடர்ந்து, விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வர இருப்பதாக தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று,மத்திய வெளியுறவுத்துறை மந்திரி 'ஜெய்சங்கர்' ரஷ்யா செல்ல இருக்கிறார்.இதில் ரஷ்யா செல்லும் ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி 'செர்ஜி லாவ்ரா'வை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா வணிக மன்றக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிக வரி விதித்துள்ள சூழ்நிலையில், ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், இந்த சந்திப்பின்போது உக்ரைனில் அமைதியைக் கொண்டுவர டிரம்ப் எடுக்கும் முயற்சிகள் குறித்து இரு நாட்டு வெளியுறவு மந்திரிகளும் விவாதிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Jaishankar Russia What reason 3 day trip