அட்லி -அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்...! என்ன role - ஆ இருக்கும்?
Ramya Krishnan star Atlee Allu Arjuns film What role she play
பிரபல இயக்குனர் அட்லி,'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தமிழ் படங்களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த வந்தார்.அடுத்த கட்டமாக ஹிந்தி திரையுலகத்தில் களமிறங்கினார்.

அங்கு கிங் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா கூட்டணியில் அவர் இயக்கிய 'ஜவான்' படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் குவித்து சாதனை படைத்தது.
தற்போது அட்லி நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் நடிகை தீபிகா படுகோனே இருவரையும் வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை 'ரம்யா கிருஷ்ணன்' தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Ramya Krishnan star Atlee Allu Arjuns film What role she play