ராஜஸ்தானில் நடந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டி...பட்டம் என்ற அதே மாநில அழகி! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான இந்தியாவின் போட்டியாளரை தேர்வு செய்வதற்கான, மிஸ் யுனிவெர்ஸ் இந்தியா போட்டி  நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் இறுதிக் கட்ட சுற்றில் அதே மாநிலத்தை சேர்ந்த 'மணிகா விஸ்வகர்மா' ''மிஸ் யுனிவர்ஸ்'' இந்தியா பட்டத்தை பெற்றுச் சென்றார்.இதில் கடந்த ஆண்டு வெற்றியாளர் 'ரியா சிங்கா' வெற்றிபெற்ற மணிகா விஸ்வகர்மா அவர்களுக்கு மகுடம் சூட்டினார்.

இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 'தன்யா சர்மா' பெற்றார்.மூன்றாம் இடத்தை ஹரியானாவைச் சேர்ந்த 'மேஹக் திங்க்ரா' என்பவர் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு முடிவில் நவம்பர் மாதம், தாய்லாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் 74வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டியில், இந்தியா சார்பில் 'மணிகா' போட்டியிட தேர்வாகியுள்ளார்.

இதனை தற்போது கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Miss Universe pageant held Rajasthan same state beauty title


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->