22 முறை வாக்களித்த பிரேசிலிய மாடல் அழகி... ஆதாரத்தை வெளியிட்ட ராகுல்காந்தி! - Seithipunal
Seithipunal


வாக்குத் திருட்டு குறித்து “ஹைட்ரஜன் குண்டு” வெடிக்கப் போகிறது என அறிவித்திருந்த ராகுல் காந்தி, இன்று பகல் 12 மணிக்கு “THE H FILES” என்ற தலைப்பில் செய்தியாளர்களை சந்தித்து அதிர்ச்சிகரமான விவரங்களை வெளிப்படுத்தினார்.

அவர் கூறியதாவது: “அரியானா தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, பாஜக முதல்வர் வேட்பாளர் நயாப் சிங் சைனி ‘ஆட்சியைப் பிடிக்கும் வேலை முடிந்துவிட்டது’ என சிரித்தபடி கூறினார். அந்தச் சிரிப்பின் பின்னால் ஒரு பெரிய சதி மறைந்துள்ளது,” என்றார்.

அவர் மேலும், “நாட்டின் இளைஞர்கள், குறிப்பாக Gen Z தலைமுறையினர் கவனமாக கேளுங்கள். இது உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் வாக்குரிமையையும் பாதுகாக்கும் பேச்சாகும்,” என வலியுறுத்தினார்.

பின்னர் அதிர்ச்சிகரமான ஆதாரங்களை வெளியிட்ட அவர், “பிரேசிலிய மாடல் அழகி ஒருவர் ஹரியானாவில் வாக்களித்திருக்கிறார். ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா உள்ளிட்ட பல பெயர்களில், ஒரே நபர் பத்து வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 22 முறை வாக்களித்துள்ளார்,” என்றார். மேலும், அதே பெண்மணி இரண்டு மையங்களில் 223 முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது வெளிப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

“இத்தகைய போலி வாக்குகள் ஆயிரக்கணக்கான மையங்களில் நடந்துள்ளன. ஒரே நபர்கள் பல முகவரிகள், வயது, அடையாள அட்டைகள் மூலம் வாக்களித்துள்ளனர். இதற்கான சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிட மறுத்திருப்பது சதிக்கு சான்று,” எனக் கூறி, தேர்தல் முறைகேட்டுக்கான ஆதாரங்களை ராகுல் காந்தி வெளிப்படுத்தினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi Vote Theft haryana 


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->