மேற்கு வங்கத்தில் SIR-க்கு பயந்து 3 பேர் தற்கொலை!
west bangal SIR People suicide
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கை குறித்து ஏற்பட்ட அச்சம், மாநிலம் முழுவதும் பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் மேலும் இருவர் தற்கொலை செய்துகொண்டதால், தற்கொலை எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
ஹௌரா மாவட்டம் உலுபெரியாவில் வசித்த 30 வயது ஜாஹிர் மல் என்பவர், அடையாள ஆவணத்தில் எழுத்துப் பிழை இருந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். அந்தப் பிழையால் தனது குடியுரிமை கேள்விக்குறியாகிவிடுமோ என்ற பயத்தில், கடந்த ஒரு வாரமாக சரிசெய்ய முயன்றும் முடியாமல் போனதால், செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அதேபோல், முர்ஷிதாபாத் மாவட்டம் கண்டியில் வாழ்ந்த 45 வயது விவசாயி மஹுல் ஷேக், தனது பெயர் 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இல்லாதது தெரியவந்ததும் மனஅழுத்தம் அடைந்தார். இதனால் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதேபோன்று, தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27 அன்று SIR அறிவித்ததையடுத்து, வட 24 பார்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது பிரதீப் கர் அடுத்த நாள் தற்கொலை செய்துகொண்டார். அவரது அறையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்த குறிப்புகளுடன் ஒரு டைரியும், தற்கொலை நோட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தற்கொலைகள் அனைத்தும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் NRC குறித்த அச்சத்தால் ஏற்பட்டவை எனக் கூறப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது.
English Summary
west bangal SIR People suicide