அதிமுக-வை தோற்கடிக்க திமுகவிற்கு வாக்கு கேட்ட விஜய்... அம்பலப்படுத்திய ஆதவ் அர்ஜுனா!
Aadhav Arjuna TVK Vijay DMK Election
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அவர் கூறியதாவது: “கரூர் சம்பவத்துக்குப் பின் விஜய் ஒன்பது மணி நேரம் அழுதார். மக்களின் துயரத்தை அரசியல் ஆதாயமாக்குவது எங்கள் கட்சியின் வழி அல்ல. கரூரில் உயிரிழந்த மக்களை விஜய் நேரில் சந்தித்தபோதும், ஒரு புகைப்படம்கூட வெளியிடவில்லை — அதுவே அவரின் உண்மையான மனிதநேயத்தை காட்டுகிறது,” என்றார்.
அவர் தொடர்ந்தார்: “இன்று மக்கள் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என தவெகையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டத்தில் நிர்வாகிகள் எத்தனை பேர் வருவார்கள் என்பதைச் சொல்ல முடியும், ஆனால் மக்கள் எத்தனை பேர் வருவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இதை உளவுத்துறைக்கு தெரியவில்லையா? தெரியவில்லையென்றால் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்யட்டும்,” என்றார்.
அதே நேரத்தில் அரசை நேரடியாகச் சவால் விடுத்த அவர், “சட்டமன்றத் தேர்தலில் கருப்பு–சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தவர் விஜய். அவருக்கு நன்றி சொல்லும் மனம் இல்லையா? தைரியம் இருந்தால் என் தலைவர் மீது கை வையுங்கள் பார்ப்போம். முதலில் அவரது வீட்டிற்கு செல்லுங்கள், அப்போது ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வந்து நிற்பார்கள்,” என எச்சரித்தார்.
இளைஞர்களின் எழுச்சி தவிர்க்க முடியாதது என வலியுறுத்திய ஆதவ் அர்ஜூனா, “2026ல் இளைஞர் புரட்சி உருவாகி கொண்டிருக்கிறது. அதை எந்த வன்ம அரசியலும் தடுக்க முடியாது,” என உறுதியாக தெரிவித்தார்.
English Summary
Aadhav Arjuna TVK Vijay DMK Election