அப்போ உதயநிதி என்ன தியாகியா? கைது என்றதும், ஸ்டாலினே ஓடி போனவர் தான்... ஆதவ் அர்ஜூனா கொந்தளிப்பு!
Aadhav Arjuna TVK Vijay DMK Udhay
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.
அவர் கூறியதாவது: “கரூர் சம்பவத்துக்குப் பிறகு தவெக முடங்கிவிட்டது, நிர்வாகிகள் ஓடிவிட்டனர் என்று பேசுகிறார்கள். யார் ஓடினார்கள்? உங்கள் தந்தை கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சொந்த மகனே ஓடினார். திமுகவுக்கு வரலாறு தெரியுமா? வரலாற்றைத் தொடந்தால் தாங்க முடியாது,” என்றார்.
அவர் தொடர்ந்தார்: “தவெக மக்கள் இயக்கம். நாங்கள் எதுவும் தவறு செய்யவில்லை; மக்களிடம் சென்று பிரசாரம் செய்தோம், ஆட்சியில் வந்தால் மாற்றம் எப்படி உருவாகும் என்பதையே பேசினோம். அதற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சொல்வது அரசியல் அல்ல, பயம். மக்களின் நம்பிக்கை தலைவர் விஜய் மீது இருக்கிறது,” எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது: “கரூர் சம்பவத்தில் காவல்துறை முழுமையாக செயலிழந்தது. அரசுக்கு கூட்டத்தின் அளவே தெரியவில்லை என்றால், உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும். திமுகவின் வாடகை வாய்கள் கரூரை மோசமான இடம் என்று சொல்கிறார்கள்; இன்னும் ஆறு மாதங்களில் யார் ரவுடி, யார் அதிகாரம் செய்வது தெரியும்,” என்றார்.
அதனைத் தொடர்ந்து, “புதிய அரசியலை உருவாக்க வந்துள்ளோம். ஊழல் குடும்ப அரசியலை அழிக்க போகிறோம். அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்த்திய நாடகம் அனைவரும் பார்த்தார்கள். உதயநிதி ஸ்டாலின் துபாயில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு வந்து, மக்களுக்காக ஓடியது போல நடித்தார். நமக்கிருந்தால் அதிகாரம், நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் கடைசி வரை இருந்திருப்போம்,” எனக் கூறினார்.
“சட்டசபையில் கிண்டல் பேசும் உங்கள் அமைச்சர்கள் முதலில் எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. உதயநிதி வாழ்க என முழங்குவதில் தியாகம் எதுவும் இல்லை,” எனக் கடுமையாக விமர்சித்தார்.
English Summary
Aadhav Arjuna TVK Vijay DMK Udhay