ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள் பெயர்! ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு...!
congress Rahul Gandhi Vote Theft haryana PM Modi
வாக்குத் திருட்டை வெளிச்சமிட்டிடப் போவதாக முன்பே அறிவித்திருந்த ராகுல் காந்தி, இன்று ‘THE H FILES’ என்ற தலைப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியதாவது: “ஹரியானா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுமார் 3.5 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்கள். ஆனால் பாஜக வெற்றிபெற திட்டமிட்டு, இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இது மக்களாட்சி அமைப்பின் அடிப்படையே 흔ைக்கும் செயல்” என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டு முகவரியில் 501 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இது திட்டமிட்ட வாக்கு மோசடியின் தெளிவான சான்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதையும், பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டிலேயே 66 வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார்.
“நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்கள் பட்டியல் மாற்றம் மூலம் மக்களிடம் இருந்து ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது. இது பாஜக ஆட்சியின் மிகப்பெரிய சதி. இதற்காக நான் இன்று ‘ஹைட்ரஜன் குண்டு’ என்று சொல்லும் இந்த ஆதாரங்களை வெளியிடுகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
English Summary
congress Rahul Gandhi Vote Theft haryana PM Modi