ஆசிய கோப்பை கிரிக்கெட் : சுப்மன் கில் வேணாம்.. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பை குடுங்க – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து!
Asia Cup Cricket Shubman Gill not wanted Give that opportunity to Yashasvi Jaiswal Ravichandran Ashwin opinion!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடமும், கிரிக்கெட் வட்டாரங்களிடமும் அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
இந்த நிலையில், முன்னாள் வீரர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, இந்திய அணியின் மூத்த வீரரும், ஸ்பின் நிபுணருமான ரவிச்சந்திரன் அஸ்வின், மாற்று துவக்க வீரர் இடம் குறித்து தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது:யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவுக்கு மாற்று துவக்க வீரராக இருந்தார்.தற்போது ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து விலகி உள்ள நிலையில், நேரடியாக ஜெய்ஸ்வாலுக்கு பேக்கப் ஓப்பனர் இடம் தரப்பட வேண்டும்.
சுப்மன் கில்லை விட, இந்த பொறுப்புக்குப் பொருத்தமானவர் ஜெய்ஸ்வால்தான். ஏனெனில் அவர் அதிரடியாக இன்னிங்ஸ் ஆடக்கூடிய திறன் கொண்டவர்.தற்போதைய டி20 அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் நல்ல திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் துவக்க வீரர்களுக்கான மாற்று விருப்பத்தில் ஜெய்ஸ்வாலே சிறந்த தேர்வு.
அஸ்வின் மேலும், “ஜெய்ஸ்வால் அனைத்து வடிவ போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். எனவே அவருக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்” என்று தெரிவித்தார்.
இதேவேளையில், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஸ்வின் ஜெய்ஸ்வாலுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று வலியுறுத்தியது, ரசிகர்களும், கிரிக்கெட் வட்டாரங்களும் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆசிய கோப்பை அணியில் இடம்பெறப் போகும் வீரர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதால், ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்குமா? அல்லது கில்க்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Asia Cup Cricket Shubman Gill not wanted Give that opportunity to Yashasvi Jaiswal Ravichandran Ashwin opinion!