தமிழக சட்டமன்ற தேர்தல் – புதிய கருத்துக்கணிப்பு வெளியீடு: திமுக தான் ஆட்சியை பிடிக்கும் 45%..! அதிமுக 4% கேப்.. கை கொடுப்பரா விஜய்? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஆளுங்கட்சியான திமுக, “ஓரணியில் தமிழகம்” என்ற முழக்கத்துடன் வீடு தோறும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இரண்டு கோடி பேரை கட்சியில் இணைக்கும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பதோடு, அதிமுக–பாஜக கூட்டணியின் தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டையும் விளக்கி வருகிறது.

மறுபுறம், அதிமுக “தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம்” என்ற முழக்கத்துடன் ஜூலை மாதம் முதல் பிரச்சாரம் செய்து வருகிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி தோறும் சென்று அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்குவதோடு, திமுக அரசின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார்.

இதே நேரத்தில், அரசியல் களத்தில் புதிதாக இறங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தவெக, செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் மக்களை நேரில் சந்திக்கத் தொடங்க உள்ளது. திமுக மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்தும், தவெக ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தனியார் நிறுவனம் நடத்திய ஆகஸ்ட் மாத நிலவரம் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் பின்வருமாறு வெளியாகியுள்ளன:

திமுக கூட்டணி – 42% முதல் 45% வாக்குகள்

அதிமுக–பாஜக கூட்டணி – 25% முதல் 39% வாக்குகள்

விஜய்யின் தவெக – 6% முதல் 8% வாக்குகள்

நாம் தமிழர் கட்சி – 4% முதல் 6% வாக்குகள்

மற்ற கட்சிகள் – 5% முதல் 6% வாக்குகள்

இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசை அமைக்கும் வாய்ப்பு திமுக கூட்டணிக்கு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக–பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க, நடிகர் விஜய்யின் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இந்நிலையில், விஜய் தனது தலைமையிலான கூட்டணியாகவே போட்டியிடுவதாக அறிவித்து வருவதால், அதிமுக–பாஜக கூட்டணியுடன் அவர் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளதால், அடுத்தகட்டத்தில் களநிலவரம், தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர் தேர்வு ஆகியவற்றைப் பொறுத்து முடிவுகள் மாற வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்பு எச்சரிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Assembly Elections New Opinion Poll Released DMK Will Win 45percent AIADMK Will Get 4percent Will Vijay Give Up


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->