கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்..பாதுகாப்பு கேட்டு பெண்கள் எஸ் பி அலுவலகத்தில் புகார்!
Cannabis addicts are causing havocWomen lodge a complaint at the SP office seeking protection
அதிகத்தூரில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம் செய்வதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரி எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் ஊராட்சியில் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இவர்களில் பெரும்பாலானோருக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து வசதிகளும் கடந்த அதிமுக ஆட்சியில் செய்து தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இரவு நேரங்களில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூரை சேர்ந்த இளைஞர்களும் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. பெண்கள், சிறுமிகள் அவ்வழியாக செல்லும்போது கேலி கிண்டல் செய்வதும், கையை பிடித்து இழுப்பதும் போன்ற அராஜக செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த சில பெண்கள் நரிக்குறவர் இன பெண்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர். நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
கஞ்சா போதை ஆசாமிகளை அங்கு வராதவாறு தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கஞ்சா போதையால் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாதிக்கப்படுவதோடு, நரிக்குறவர் என பெண்களும் இதில் பாதிப்புக்கு உள்ளாவதால் விடியா திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
English Summary
Cannabis addicts are causing havocWomen lodge a complaint at the SP office seeking protection