#திருப்பத்தூர் || மழை நீர் தேங்கிய குழியில் விழுந்து 2 சிறுமி உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகம் ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சூழ்ச்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் வட மற்றும் வட உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிக்கனாங்குப்பம் எனும் கிராமத்தில் மழைநீர் தேங்கி குட்டையில் மூழ்கி ஒரே நேரத்தில் இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இரு சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்த போது மழைநீர் தேங்கிய 10 அடி குழிக்குள் தவறி விழுந்ததால் ராஜலட்சுமி (வயது 15), மோனிகா (வயது 10) என்ற இரு சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேர்வு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2girls died after falling into pit filled with rainwater in Tirupattur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->