செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி.!!
2 students drowned in Sembarambakkam lake
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் சேர்ந்த ரிஷிகேஷ் (18), சாலிகிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (18) ஆகிய இரு மாணவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர இருந்த நிலையில் 2 பேரும் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்கும் போது தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயர்ந்ததாக தெரிய வருகிறது. மாணவர்கள் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 students drowned in Sembarambakkam lake