விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி.!!
2 killed in Virudhunagar firecracker factory accident
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியில் பட்டாசு ஆலை வடிவத்தில் இருவர் பலி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் சிவகாசியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிக்கும் அறைகள் செயல்பட்டு வந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

அப்பொழுது ஒரு அறையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வின் காரணமாக எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த அறையில் பணியாற்றி வந்த பானு மற்றும் முருகேஸ்வரி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த வரி விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் சாத்தூர் வெம்பக்கோட்டை சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் தீ மேலும் வராமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சாத்தூர் டிஎஸ்பி வெடி விபத்து குறித்து ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
2 killed in Virudhunagar firecracker factory accident