அமமுக அரியலூர் நிர்வாகி இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு! டிடிவி தினகரன் வாழ்த்து!
TTV Dhinakarn wish s karthik
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.கார்த்திக். மாற்றுத்திறனாளியான இவர் மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.
மேலும், அரசியல் பொதுவாழ்க்கையில் நுழைந்த எஸ்.கார்த்திக், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
அதே சமயத்தில், மாநில அளவில் பல கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்றுள்ள எஸ்.கார்த்திக் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், எஸ்.கார்த்திக் சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த வாழ்த்துச் செய்தியில், "அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் அன்பு சகோதரர் திரு.எஸ்.கார்த்திக் சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள தகவல் அறிந்து மகிழ்ந்தேன்.
எஸ்.கார்த்திக் மற்றும் அணியின் உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லவும் வாழ்த்துகின்றேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakarn wish s karthik