இந்தியா பேட்டிங் : ஆடுகளத்தில் உள்ளே புகுந்த பாம்பு! தெறித்து ஓடிய வீரர்களால் நிறுத்தப்பட்ட ஆட்டம்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று 20 ஓவர்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இன்று இரண்டாவது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. கடந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறவே அதே அணியுடன் விளையாடுகிறது. தென்னாபிரிக்கா அணியில் ஷம்சி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நிகிடி சேர்க்கப்பட்டிருக்கிறார். 

போட்டி தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் ரோஹித் ஷர்மா, வெய்ன் பார்னெல் வீசிய பந்தில் கையில் அடிபட்டு காயம் அடைந்தார். அவருக்கு நீண்ட நேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகே தொடர்ந்து ஆடி வருகிறார். அவர் கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ராகுல் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். 

7 ஓவருக்கு 68 ரன்கள் அடித்திருந்த போது ஆடுகளத்தில் உள்ளே பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள நடுவரிடமும், பேட்டிங் செய்த ராகுலிடமும் தென்னாப்பிரிக்க வீரர்கள் தெரிவிக்கவே, ஆடுகள பராமரிப்பாளர்கள் உரிய கருவியுடன் வந்து பாம்பை பத்திரமாக மீட்டுச் சென்றனர். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Snake stops play after entering the outfield in INDvSA 2nd T20 match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->