முடிவுக்கு வந்தது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை! ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கிய அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டி உலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி விளையாடாமல் இருந்து வருகிறார். அவர் அதன்பின் நடைபெற்ற சர்வதேசப் போட்டித் தொடரிலும் கலந்து கொள்ளவில்லை. 

இந்த நிலையில் அவர் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக விளையாடினால் இந்த வருடம் இறுதியில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தோனியின் ரசிகர்கள் பெரும் ஆவலாக தோனியின் சர்வதேச கிரிக்கெட் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் என மிகவும் எதிர்பார்த்த நிலையில் மார்ச் 2-ம் தேதி சென்னைக்கு வந்து பயிற்சியை துவங்கினார் மகேந்திர சிங் தோனி. 

துரதிஷ்டவசமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஆனது ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் இந்திய அளவிலும் உலக அளவிலும் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த வருடம் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதாவது குறைந்த பட்சம் போட்டி நடைபெறுவதே சந்தேகம் தான் என்ற நிலையும் இருந்து வருகிறது. ஒருவேளை போட்டி நடைபெற்றாலும் அது செப்டம்பர் மாதம் பக்கத்தில் வெளிநாடுகளில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான் தோனி ஐபிஎல்லில் விளையாடி அதன் பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவது என்பது இயலாத ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு அடுத்து வரவுள்ள தொடர்களில் இந்தியாவின் தற்போது விக்கெட் கீப்பராக லோகேஷ் ராகுலும் ரிஷப் பண்ட் மிகச்சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களின் இடத்தினை தக்க வைத்துக்கொள்வார்கள். இந்த சூழலில் தோனியை அணிக்கு கொண்டு வந்தால் அவரை வெளியில் உட்கார வைக்கவா முடியும்? எந்த இடத்தில் களமிறக்குவது என்ற பெரிய தலைவலி இந்திய அணிக்கு ஏற்படும். அதனால் அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்புவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே தற்போது வரை தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ms dhoni will not participate in international cricket


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal