மும்பைக்கு தேர்வான அர்ஜுன் டெண்டுல்கர் சொல்வது என்ன?!  - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-க்கான மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை அவரது அடிப்படை விலையான ரூ20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதனையடுத்து சச்சின் மகன் என்பதற்காக ஐபிஎல் வாய்ப்பா என்ற பேச்சுக்கள் எழுந்தன.

கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் தலைவர், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் மற்றும் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆதரவு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளனர். 

பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறுகையில், அர்ஜுன் அணியில் இணைவது நல்லதுதான். கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் அணிக்காக நெட் பவுலராக கடுமையாக உழைத்தார். குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரி ல் யுஏஇ-யில் கடினமாக உழைத்தார். அப்போது அவரது திறமையை கண்ட நாங்கள், அதனை கருதியே தேர்வு செய்தோம்" என தெரிவித்துள்ளார். சச்சின் மகன் என்பதால் அவருக்கு சுமை இருக்கத்தான் செய்யும். அவர் மீது அந்த அழுத்தத்தை திணிக்காதீர்கள் என கூறியுள்ளார். 

ஜாகீர் கான் கூறும்போது, “அர்ஜுனின் பந்து வீச்சைப் பார்த்திருக்கிறேன், அபாரத் திறமையுடையவர். அவருக்கு சில நுணுக்கங்களை ஏற்கெனவே கற்றுக் கொடுத்துள்ளேன். அவர் கடின உழைப்பாளி, கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்கவர் என்பதால் தேர்வு செய்தோம். சச்சின் டெண்டுல்கர் மகன்  என்ற ஒரு பெரிய அழுத்தம் அவர் மீது அழுத்தவே இருக்கவே செய்யும், அதனை தாங்கி தான் வாழ்ந்து ஆகவேண்டும். அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் அர்ஜுனுக்கு உதவிகரமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அணிக்கு தேர்வானது குறித்து அர்ஜுன் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘சிறுவயதில் இருந்தே நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன். பயிற்சியாளர்களுக்கும், உதவி பயிற்சியாளர்களும், அணி நிர்வாகமும் என்மீது நம்பிக்கை வைத்ததற்காக நன்றி. மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய ஆர்வமாக உள்ளேன். மும்பை இந்தியன்ஸ் சீருடையை அணிவதற்காக காத்திருக்க முடியாது’’ என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahela and Zaheer defend selection of arjun tendulkar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->