ஐபிஎல் இந்திய வீரர் காயம்! உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு ஆடுவதில் சிக்கல்!  - Seithipunal
Seithipunal


சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேதர் ஜாதவ் காயமடைந்துள்ளார் என்றும் அவரால் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது எனவும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சென்னை பஞ்சாப் அணிகள் இடையேயான இறுதி லீக்  போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த சென்னை அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் காயமடைந்தார். அவரது காயத்தின் தன்மை குறித்து இதுவரை தெரியாத நிலையில் இன்று அவருக்கு ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன.

அவர் தற்போது போட்டியில் களமிறங்க கூடிய அளவிற்கு உடல் தகுதி பெறவில்லை எனவும் இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் பிளமிங் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவரது உடல்நலம் தேறினாலும் விரைவில் நடக்கவுள்ள உலக கோப்பை போட்டித் தொடரினை கவனத்தில் கொண்டு இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் ஆடமாட்டார் என தெரிகிறது. 

இன்று அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அவர் உலக கோப்பை போட்டிகளில் ஆடுவாரா அல்லது அவரது காயம் அவருக்கு தடையாக இருக்குமா என்பது தெரியவரும். ஜாதவ் பல போராட்டங்களுக்கு பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அணியின் நம்பிக்கைக்குரிய எதிர்பாராத ஆல்-ரவுண்டராக கேதர் ஜாதவ் இருந்து அவ்வப்போது, முன்னணி பவுலர்கள் சொதப்பும் நேரத்தில் அணிக்கு கை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kedhar jadhav injured doubt for world cup


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal