சென்னை ரெண்டவாது டெஸ்ட் : இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர் விலகல்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில் இரண்டாவது போட்டி சென்னையில் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான அணியில் கடந்த போட்டியில் ஆடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வில் இருக்கும் ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் திடீரென கடந்த போட்டியில் விளையாடிய மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் காயமடைந்த காரணமாக அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதால், இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் உறுதி செய்து அறிவித்துள்ளது. 

இதையடுத்து அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் இடம் பெறுவார் எனவும் அணியில் ஏற்கனவே இருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் தொடர்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சோப்ரா ஆர்ச்சர் கடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் பேட்டிங் நிலைகுலையச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தாலும் இந்திய அணிக்கு சற்று ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jofra Archer Retunr Back to England due to Injury


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal