#IPL2023 : களைகட்ட தொடங்கிய ஐபிஎல் திருவிழா.. பெங்களூர் அணியில் இணைந்த விராட் கோலி.!
IPL 2023 Virat Kohli joined RCB squad
16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
English Summary
IPL 2023 Virat Kohli joined RCB squad