பரங்கிமலை அருகே ரெயில் மோதி கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!!
college students died for train accident in parangimalai
பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் ரெயில் மோதியதில் உயிரிழந்த சம்பவம் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக வந்த ரெயில் மோதி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் செல்போன் பேசிக்கொண்டே அலட்சியமாக தண்டவாளத்தை கடந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college students died for train accident in parangimalai