மதுரை சித்திரை திருவிழா - வைகை ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி.!!
school student died for drowned vaikai river in madurai
மதுரையில் கொண்டாடப்படும் திருவிழாவில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இந்தத் திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
கள்ளழகரை வரவேற்பதற்காக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருதுநகர் காரியாபட்டி பகுதியை சேர்ந்த ஜெயவசீகரன் என்ற 16 வயது பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student died for drowned vaikai river in madurai