பாமக தொண்டர் விபத்தில் மரணம்: மருத்துவர் இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பாமக தொண்டர் விஜய் மரணத்திற்கு, பாமக நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மாமல்லபுரத்தில் நடைபெற்ற  சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு வரும் போது  சீர்காழி  அருகே  நிகழ்ந்த விபத்தில் வைத்தீஸ்வரன் கோயில் மருவத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற பாட்டாளி உயிரிழந்தார்; முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.   

விஜயை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் காயமடைந்த  முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட 5 பேரும் விரைவில் முழுமையாக உடல் நலம் தேறி  வீடு திரும்ப எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss condolence PMK Membar Vijay Death in accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->