18 ஆண்டுகள் காத்திருப்பு முடிவு...! நாளை வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை தொடக்கம்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் நீண்ட நாட்களாக பயணிகள் எதிர்பார்த்து வந்த வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை நீட்டிப்பு திட்டம் தற்போது தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் கடந்த வாரம் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், ரெயில்வே பாதுகாப்பு ஆய்வில் கண்டறியப்பட்ட சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த திட்டம் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு சமீபத்தில் முழுமையடைந்தது. தண்டவாளம், மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் அமைப்புகள் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சரக்கு ரெயில்கள் மூலம் வெற்றிகரமான சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

தலைமை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தபோது புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட புதிய நிலையங்களிலும் பரிசோதனை நடைபெற்றது.

பின்னர் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை நாளை முதல் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம்,வேளச்சேரி, நங்கநல்லூர்,  புழுதிவாக்கம் பகுதிகளின் நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.

மேலும் சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை நேரடி பயணம் சாத்தியமாகி, தென் சென்னை போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

18 Year Wait Ends Velachery St Thomas Mount Elevated Train Service Launches Tomorrow


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->