09, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கட்டாயம்; இரண்டு வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டுமானால்..? சிபிஎஸ்இ அறிவிப்பு..!
CBSE Announces Three Language Requirement for 9th and 10th Grade Students
2026 ஜூலை 01-ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 09 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 03 மொழிகள் கற்பதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கட்டாயமாக்கியுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது;
2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை (NEP) மற்றும் 2023-ஆம் ஆண்டின் பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF-SE) ஆகியவற்றிப் படி, மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகளாவது இந்தியாவின் பூர்வீக மொழிகளாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 10-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கு பொதுத் தேர்வு ஏதும் நடத்தப்படாது என்றும், மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, உதாரணத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் தனது தாய் மொழியான தமிழ் மொழியை தவிர்த்து, இந்திய மொழிகளில் ஏதேனும் கூடுதலாக ஒரு மொழியிலேயே கட்டாயமாக இனி கற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேசயம், இரண்டு வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டுமானால், நான்காவது மொழியாக படித்துக் கொள்ளலாம் என்றும், ஆனால், இந்திய மொழிகளில் இரண்டில் ஒன்றை குறைத்துக் கொள்ள முடியாது என்று சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
CBSE Announces Three Language Requirement for 9th and 10th Grade Students