டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையராக ஜெயா.ஐஏஎஸ் பதவியேற்பு..!
Jaya IAS assumes charge as Resident Commissioner of Tamil Nadu House in Delhi
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரான ஆர்.ஜெயா டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையராக ஜெயா.ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று பதவி ஏற்றுக் கொண்டார். இப்பதவியில் அமரும் முதல் பெண் அதிகாரி இவர் ஆவார்.
ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.ஜெயா, 1995 ஆம் ஆண்டின் தமிழ்நாடு மாநிலத் தொகுப்பில் பணியாற்றி வருபவர். இதற்கு முன்னதாக இவர் தமிழ்நாடு அரசின் சிறப்பு முன்முயற்சிகள் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் செயலாளராக பணிபுரிந்துள்ளார்.
புது தில்லியில் மத்திய அரசின் அயல்பணியில் பல்வேறு அமைச்சகங்களில் இணைச் செயலாளர், கூடுதல் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், தமிழ், ஆங்கிலத்துடன் மராட்டி மற்றும் இந்தி மொழிகளிலும் புலமை பெற்றவர்.
English Summary
Jaya IAS assumes charge as Resident Commissioner of Tamil Nadu House in Delhi