எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! இதுதான் காரணம்! உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.! - Seithipunal
Seithipunal


நடிகை ரோஜா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. தனது சினிமா வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஒரு காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரோஜா, பின்னர் அரசியலிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். ஆந்திர அரசியலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக செயல்பட்ட அவர், நகரி தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்திய பேட்டியில், “சினிமாவில் நடிகைகளுக்கு காம்ப்ரமைஸ் தொல்லைகள் அதிகம் என்கிறார்களே, உங்களுக்கும் அப்படியான அனுபவங்கள் இருந்ததா?” என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரோஜா, “அது பற்றி நான் கேள்விப்பட்டதுதான். ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் அப்படியான எந்த அனுபவமும் இல்லை. யாரும் என்னை தொந்தரவு செய்ததில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “நான் தமிழ் சினிமாவில் ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் அறிமுகமானேன். அந்தப் படத்தை இயக்கியவர் ஆர்.கே. செல்வமணி. முதல் படத்திலிருந்தே எங்களுக்குள் காதல் உருவானது. அப்போது அவர் ஒரு பெரிய இயக்குநர். அதனால் எல்லோரும் எனக்கு மரியாதை கொடுத்தார்கள். எந்த ஹீரோவும் என்னிடம் வந்து ப்ரொபோஸ் செய்யவில்லை. தொல்லை கொடுக்கவும் முயற்சிக்கவில்லை” என்றார்.

“செல்வமணியை காதலித்தது என் கரியர் ஆரம்பத்தில் எனக்கு ஒரு பாதுகாப்பாக இருந்தது” என்றும் ரோஜா கூறினார்.

அதோடு, “நான் சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசையோடு வரவில்லை. அது தற்செயலாக நடந்தது. வாய்ப்புக்காக எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. அதனாலேயே யாரும் என்னை தவறாக அணுகவில்லை” என்று அவர் விளக்கமாக கூறினார்.

ரோஜாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது நேர்மையான பதில்களுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No hero even comes close to me This is the reason Actress Roja broke the truth


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->